விபத்தில் சிக்கிய கார்… பிரபல சீரியல் நடிகை உயிரிழப்பு!

கன்னடத்தில் பல்வேறு சீரியல்களில் நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் பவித்ரா ஜெயராம். இவர் தெலுங்கிலும் சீரியல்களில் நடித்துள்ளார்.

நடிகை பவித்ரா ஜெயராம் நடிப்பில் தற்போது தெலுங்கில் திரினாயினி என்கிற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மாரி தொடரின் தெலுங்கு ரீமேக் திரினாயினி ஆகும். அந்த சீரியலில் திலோத்தமா என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் பவித்ரா ஜெயராம்.

நடிகை பவித்ரா ஜெயராம் நேற்று கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஹனகெரே பகுதிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

பவித்ரா ஜெயராம் கார் தெலங்கானா மாநிலம் மெகபூப் நகர் அருகே வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்தின் வலது புறத்தில் பயங்கரமாக மோதியது.

விபத்தில் சம்பவ இடத்திலேயே நடிகை பவித்ரா ஜெயராம் உயிரிழந்தார். உடன் காரில் இருந்த மூவர் காயங்கள் உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் பவித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

NEXT: TRP-யில் டாப் 10 இடங்களை பிடித்த சீரியல்கள் இதோ!