12 NOV 2024

காலையில் எழுந்தவுடன் செல்போன் யூஸ் பண்ணுவீங்களா?  உஷார்!

Author Name : Mohamed Muzammil S

Pic Credit -  Pinterest

கண்களுக்கு தீங்கு

காலையில் எழுந்தவுடன் முதலில் அலைபேசியை‌ பயன்படுத்தும் பழக்கம் பலருக்கும் உண்டு. இது கண்களுக்கு மோசமான தீங்கை ஏற்படுத்தும்.

மெலடோன்

எழுந்தவுடன்‌ அலைபேசியை பயன்படுத்துவதால் அதில் உள்ள ஒளி‌ உடலில் மெலடோனை அதிகரிக்கிறது. இதனால் அதிக நேரம் தூங்க நேரிடும்.

தூக்கமின்மை

தூங்குவதற்கு முன் அல்லது தூங்கி எழுந்த பின் அலைபேசியை பயன்படுத்தும் அதிலிருந்து வரும் நீல ஒளியை விழித்திரை உறிஞ்சி கொள்ளும். இதனால் தூக்கமின்மை ஏற்படும்

மன அழுத்தம்

காலையில் ஃபோன் பார்க்க ஆரம்பித்தால் உங்களுக்கு அது மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் உண்டாக்கும்.

கண் வறட்சி

காலையில் அதிக நேரம் மொபைல் போன்‌‌திரையை உற்றுப் பார்ப்பதால் கண்கள் வறண்டு போகும்.‌

பார்வை

காலையில் அலைபேசியை பயன்படுத்துவதால் பார்வை பாதிக்கப்படுகிறது. மேலும் இது மாக்குலர் சிதைவு அபாயத்தை ஏற்படுத்துகிறது.

நிபுணர்கள்

எனவே தூங்கி எழுந்தவுடன் மொபைல் ஃபோன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.