12 OCT 2024
Author Name : Mohamed Muzammil S
Pic Credit - Pinterest
அளவுக்கு அதிகமாக சாக்லேட் சாப்பிட்டால் வயிறு உப்புசம், மலச்சிக்கல், வயிற்றுப் பிடிப்பு போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
சாக்லேட் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனடியாக உயர்த்துவதால் சோர்வு, எரிச்சல், எடை அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கு வழி வகுக்கிறது.
சாக்லேட்டில் உள்ள காபீன் சாக்லேட்டில் காபீன் அதிகமாக உள்ளதால் இதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் கவலை, நடுக்கம், படபடப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும். தூக்கத்தையும் பாதிக்கும்.
சாக்லேட்டில் அதிக அளவு கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உள்ளது. எனவே அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் உடல் எடை கூடும்.
அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் இதை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் அரிப்பு, வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்