10 JULY 2024

நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தால் இவ்வளவு பிரச்னையா?

Umabarkavi

Pic credit - Unsplash

பாதிப்பு

இன்றைய காலகட்டத்தில் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. இதனால், ஏற்படும் பாதிப்புகள் பற்றி பலரும் அறிவதில்லை

உடல் பருமன்

நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பதால் உடல் பருமன், முதுகுவலி, கழுத்துவலி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்

முதுகுவலி

நீண்ட நேரம் உட்காந்திருப்பதால் தசைகள் செயலிழந்து, பலவீனமாகும். மோசமான முதுகுவலி போன்ற சிக்கல்கள் ஏற்படலாம்

டைப் 2 நீரிழிவு

உடலில் உள்ள வளர்ச்சிதை மாற்ற செயல்முறைகளை பாதிக்கலாம். இறுதியில் டைப் 2 நீரிழிவு அபாயம் கூட ஏற்படலாம்

பிரேக்

வேலை நேரங்களுக்கு இடையில் பிரேக் எடுப்பது நீண்ட நேரம் உட்காந்திருப்பதால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கலாம்

30 நிமிடங்கள்

ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுவது, உட்காருவது, நிற்பது, நடப்பது போன்ற பழக்கங்களை பின்பற்றுங்கள்

உடற்பயிற்சி

உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை காக்க முடியும்