26 October 2024
Pic credit - freepik
Author : Mukesh
சாக்ஸ் இல்லாமல் ஷூக்களை அணிவது காலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உடலில் அதிகமாக வியர்வை சுரக்கும் பகுதிகளில் பாதங்களும் ஒன்று. இதனால், சாக்ஸ் இல்லாமல் ஷூ அணிவதால் பாதங்கள் அதிகளவில் ஈரம் ஆகும்.
பாதங்கள் ஈரப்பதமாகும்போது பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளரும் அபாயத்தை அதிகரிக்கிறது.
பாதங்களில் வியர்வை அதிகரிப்பதால், பாதத்தின் தோலில் ரிங்வோர்ம், அரிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சாக்ஸ் இல்லாமல் ஷூ அணிவதால் பாதத்தின் சில பகுதிகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு இரத்த ஓட்டம் சரியாக நடக்காமல் போகலாம்.
சாக்ஸ் இல்லாமல் ஒரே ஷூவை நீண்ட நேரம் அணியும்போது காயங்கள் ஏற்படலாம். பெரும்பாலான ஷூக்கள் தோல் மற்றும் செயற்கை பொருட்களால் செய்யப்படுகின்றன.
சாக்ஸ் இல்லாமல் சிறிய அளவிலான ஷூக்களை அணிவது பாதங்களின் வடிவத்தையும் பாதிக்கும்.