15 June 2024

ஏசியில் நீண்ட நேரம் இருப்பதால் இவ்வளவு பிரச்னைகளா?

கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள பல வழிகளை அனைவரும் தேர்ந்தெடுப்பார்கள். அதில் ஒன்று தான் ஏசியில் முழு நேரமும் இருப்பது

நாள் முழுவதும் ஏசியில் இருப்பதால் வெப்பத்திலிருந்து தப்பிக்கலாம். அதனால் ஏற்படும் பாதிப்புகளை கவனிக்காமல் விடுவது உடலுக்கு நல்லதல்ல

ஏசியில் தொடர்ந்து இருப்பதால் கண்கள் வறட்சி அடைய அதிக வாய்ப்பு உள்ளது. கண்களுக்கு ஈரப்பதம் கிடைக்காததால் இந்த வறட்சி ஏற்படுகிறது

கண் வறட்சி ஏற்படுவதோடு, உடல் வறட்சியும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், ஏசியில் இருக்கும்போது தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஏசியை அடிக்கடி சுத்தம் செய்யவில்லை என்றால் அலர்ஜி, ஆஸ்துமா போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம். இதனால், ஏசியை அடிக்கம் சுத்தம் செய்ய வேண்டும்

ஏசியில் அதிக நேரம் இருப்பதால் முடி உதர்வு போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம். முடி உடைதல், முடி வறட்சி அடைதல் போன்றவை ஏற்படலாம்

இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க ஏசியில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்கலாம். ஒரு நாளைக்கு  1 மணி நேரம் அல்லது அரை மணி நேரம் மட்டுமே ஏசியில் இருக்கலாம்

NEXT: வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்