முகத்தில் எண்ணெய் வடியாமல் தடுப்பது எப்படி..?

17 JULY 2023

Pic credit - tv9

Author Name :Mukesh

முகம் கழுவுதல்

தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு தண்ணீரில் முகம் கழுவ வேண்டும்.

ஆரோக்கிய உணவுகள்

முடிந்தவரை கடை உணவுகளை சாப்பிடாமல், வீட்டில் சமைக்கப்படும் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்.

காய்கறிகள்

நாம் சாப்பிடும் உணவுகளில் பெரும்பாலும் காய்கறிகள், தானியங்கள், கீரைகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

முகம் பளிச்

தேன், கற்றாழை, எலுமிச்சை, தக்காளி, இவைகள் எதாவது ஒன்றை முகத்தில் தடவி வந்தால் எண்ணெய் பசை உள்ள முகம் பளிச்சென்று மாறும்.

முகப்பருக்கள் போக

தினமும் முகத்திற்கு சுடுதண்ணீர் ஆவி பிடிப்பது நல்லது. இதனால் எண்ணெய் பசை நீங்கி, முகத்தில் பருக்கள் மறையும்.

தக்காளி பலன்

தக்காளிப் பழத்தை எடுத்து வெட்டி குளிப்பதற்கு முன்னர் முகத்தில் தேய்த்து, 20 நிமிடங்களிற்கு பின்னர் குளித்தால் எண்ணெய் பசை நீங்கும்.

ஐஸ் கட்டி

காலையில் எழுந்ததும் ஐஸ் கட்டிகளை கொண்டு மெதுமெதுவாக முகத்தை வருடி கொடுப்பதால் தோலிற்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.