வறண்ட சருமத்திற்கான பராமரிப்பு குறிப்புகள்

25 June 2024

சில நேரங்களில் சருமம் வறண்டு காணப்படும். இதனால் முகம் பொலிவுடன் காணப்படாமல் வறட்சியாக இருக்கும். இதற்கு சில வழிமுறைகள் பின்பற்றினால் போதும்

வறண்ட சரும கொண்டவர்கள் ஒரு நாளைக்கு அதிகமாக இரண்டு முறை முகத்தை கழுவினால் போதும். இதில், தூங்க செல்வதற்கு முன் கட்டாயம் கழுவலாம்

முகத்தில் உள்ள எண்ணெய், அழுக்குகளை அகற்ற மைல்ட் கிளென்சரைப் பயன்படுத்தவும்

சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைக்க சருமத்திற்கு ஏற்ற டோனர்களை பயன்படுத்தவும்

வைட்டமின் ஈ நிறைந்த சீரம்களை முகத்தில் தடவலாம். சருமத்தை ஈரபதமாக்க மாய்ஸ்சரைசரை பயன்படுத்தவும்

சூரிய ஒளியிலிருந்து சருமத்தை காக்க மாய்ஸ்சரைசர்களை கொண்ட சன்ஸ்கிரீன்களை பயன்படுத்தவும்

குறிப்பாக கடைகளில் இருக்கும் சோப்களை பயன்படுத்துவதை தவிர்த்து மருத்துவரை அணுகி உங்களது சருமத்திற்கு ஏற்ற கிளென்சரைப் பயன்படுத்தவும்

NEXT: வாய் துர்நாற்றம் நீங்க இதை மட்டும் பண்ணுங்க!