நடிகை ஹன்சிகா குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்!

09 AUGUST 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

குழந்தை நட்சத்திரமாக இந்தியில் நடித்து வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. கடந்த 2007-ம் ஆண்டு தேசமுத்ருடு என்ற தெலுங்கு படம் மூலம் நாயகியாக திரையுலகில் அறிமுகம் ஆனார்.

அறிமுகம்

தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாப்பிள்ளை’ படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார் நடிகை ஹன்சிகா மோத்வானி.

மாப்பிள்ளை

அதை தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம், உடன் ஒரு கல் ஒரு கண்ணாடி, ரோமியோ ஜூலியட் இப்படி பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

படங்கள்

தமிழ் திரையுலக ரசிகர்களால் குட்டி குஷ்பூ என அழைக்கப்பட்டவர் நடிகை ஹன்சிகா. மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம்பிடித்தார் நடிகை ஹன்சிகா மோத்வானி.

 குட்டி குஷ்பூ

பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் கடந்த 2020-ம் ஆண்டிற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அவர், தற்போது இணைய தொடர் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இணைய தொடர்

2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹன்சிகா தனது கதலர் சோஹேல் கதுரியாவை திருமணம் செய்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்தும் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

 திருமணம்

ஹன்சிகா தற்பொழுது காந்தாரி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இன்று ஹன்சிகா தனது 33-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

பிறந்த நாள்