இயற்கையுடன் நேரம் செலவிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

30 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

30 நிமிடம் 

தினமும் 30 நிமிடம் இயற்கையுடன் இருக்கும் பட்சத்தில் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

மன அழுத்தம் 

இயற்கையுடன் நேரத்தை செலவிடும்போது மன அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது.

இரத்த அழுத்தம் 

மன அழுத்தம் குறைவதோடு ரத்த அழுத்தம் மற்றும் பதற்றம் உள்ளிட்ட பிரச்னைகள் குறைய வாய்ப்புள்ளது.

இதய ஆரோக்கியம்

இயற்கையுடன் நேரத்தை செலவிடும்போது பதற்றம் குறைந்து இதயத்திற்கு ரத்த ஓட்டம் சீராக செல்லும். இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

மாரடைப்பு 

இவ்வாறு இதயத்திற்கு சீரான ரத்த ஓட்டம் செல்வதன் மூலம் மாரடைப்பு உள்ளிட்ட இதயம் சார்ந்த பிரச்னைகள் குறைய வாய்ப்புள்ளது.

மூளை செயல்பாடு

இயற்கையுடன் நேரத்தை செலவிடும்போது நரம்பு மண்டல ஆரோக்கியம் மேம்படும். இதனால் மூளையில் செயல்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மகிழ்ச்சி

இயற்கையுடன் இருக்கும்போது உடலில் என்ட்ரோபின் ஹார்மோன் சுரக்கிறது. இது பதற்றத்தை குறைத்து மகிச்சியாக இருக்க செய்கிறது.

மேலும் படிக்க