காரமான உணவுகளை அதிகம்  சாப்பிடும் நபரா நீங்கள் : உஷார்!

23 SEP 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

காரமான உணவு

பெரும்பாலான மக்கள் காரமான உணவு வகைகளை அதிகம் சாப்பிட விரும்புகின்றனர்.

ஆபத்துக்கள்

காரமான உணவுகள் சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும் அவை உடலுக்கு பல்வேறு ஆபத்துக்களை விளைவிக்க கூடியவை.

வியர்வை

காரமான உணவுகள் உடலின் வெப்பத்தை அதிகரிக்க செய்யும். அது உடலில் இருந்து அதிகமாக வியர்வையை வெளியேற்ற செய்கிறது.

நீர் சத்து

அதிகமாக காரமான உணவுகளை சாப்பிடுவதன்  மூலம் உடலில் நீர் சத்து குறையும் அபாயம் உள்ளது.

மருந்து

காரம் நாம் சாப்பிடும் மருந்துகளின் செயல்பாட்டை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

நெஞ்செரிச்சல்

அதிகமாக கார உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நெஞ்செரிச்சல், வயிற்று எரிச்சல் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

சரும பிரச்னை

காரமான உணவுகள் தோல் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. குறிப்பாக தோல் அரிப்பு மற்றும் சிவப்பு ஏற்படுகிறது.

மேலும் படிக்க