05 May 2024

கோடைகாலத்தில் ஏபிசி ஜூஸ் குடிக்கலாமா? பயன்கள் என்ன?

உடல் எடையை குறைக்க நினைக்கும் பலர் ஏபிசி ஜூஸ் அதாவது ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஜூஸ் குடிப்பது வழக்கம்

உடல் ஆரோக்கியத்தையும், இயற்கையான சரும அழகையையும் விரும்புவர்களுக்கு இந்த ஜூஸ் ஒரு வரப்பிரதாசமாகும்

இதில் அதிகப்பட்டியான ஊட்டச்சத்துகளும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்

இதில் உள்ள குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் உடலில் மெட்டாலிசத்தை அதிகரிக்க செய்யும். இதனால் எடை இழப்பு நடக்கும்

இதை டீடாக்ஸ் ஜூஸ் என்றும் சொல்லலாம். ரத்தத்தை சுத்திகரிக்கும். ரத்த அணுக்களை உற்பத்தி செய்யும்

பரு, கரும்புள்ளிகள், முகச்சுருக்கம் போன்ற சரும பிரச்னைகளை இந்த ஜூஸ் போக்கும்

இந்த அற்புதமான பானத்தை கோடையில் குடிப்பது நல்லது. காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்தது.

ஒவ்வாமை இருப்பவர்கள் ஒரு முறை மருத்துவரின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுங்கள்

NEXT: உடல் எடையை குறைக்க இரவு உணவை தவிர்க்கிறீர்களா? ஆபத்து!