வெங்காயம் நறுக்கும்போது கண்ணீர் வராமலிருக்க டிப்ஸ்

06 July 2024

Pic Credit: Unsplash

வெங்காயம்

வெங்காயம் இல்லாத குழம்பு, பொறியல் வகைகளும் அவ்வளவாக சுவையாக இருக்காது. எனவே, குழம்பு முதல் தயிர் வரை வெங்காயத்தை பயன்படுத்தி வருகிறோம்

கண் எரிச்சல்

சமையலுக்கு முக்கியமாக இருக்கும் வெங்காயத்தை நறுக்கும்போது கண் எரியும், கண்ணீர் வரும். எனவே, வெங்காயம் நறுக்குவது பலருக்கும் பெறும் சவாலாக இருக்கும்

டிப்ஸ் 

எனவே, வெங்காயம் நறுக்கும்போது கண் எரியாமல் இருக்க என்ன செய்யலாம் என்று பாரப்போம்

சூடாக்கவும்

ஒரு பாத்திரத்தில் வெங்காயம் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான அளவு சூடாக்கவும்.

சுடு தண்ணீர்

வெங்காயத்தை சுடு தண்ணீரில் போடுவதால் அது வெந்துவிடும் என நினைக்க வேண்டாம். வெங்காயத்தை 3 அல்லது 5 நிமிடம் சூடாக்கினால் போதும்

30 நொடிகள்

பின் நறுக்க வேண்டிய வெங்காயத்தை தண்ணீரில் போட்டு 30 நொடிகளுக்கு பின் எடுத்துவிடவும்

கண் எரியாது

இப்போது வழக்கம்போல் வெங்காயத்தின் தோலை நீக்கிவிட்டு வெங்காயத்தை நறுக்கலாம். இப்போது கண் எரியாது