இன்ஸ்டாவில் அதிக பாலோவர்களை கொண்ட டாப் 10 தமிழ் நடிகைகள்!

தமிழ், மலையாளம், தெலுங்கு என கொடிகட்டி பறக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இன்ஸ்டாவில் 16.3 மில்லியன் பாலோவர்கள் உடன் பட்டியளில் 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பான் இந்திய நடிகையாக கலக்கி வரும் கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாவில் 17.8 மில்லியன் பாலோவர்கள் உடன் பட்டியளில் 9-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பாலிவுட்டில் தற்போது பிசியாக நடித்து வரும் நடிகை டாப்ஸி 20.6 மில்லியன் பாலோவர்களுடன் இன்ஸ்டாவில் 8-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் இன்ஸ்டாவில் 23.7 மில்லியன் பாலோவர்களுடன் 7-வது இடத்தில் உள்ளார்.

பான் இந்திய நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா இன்ஸ்டாவில் 25.6 மில்லியன் பாலோவர்கள் உடன் 6-வது இடத்தில் உள்ளார்.

தமிழில் படங்கள் இல்லை என்றாலும், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன் இன்ஸ்டாவில் 24.8 மில்லியன் பாலோவர்கள் உடன் 5-வது இடத்தில் உள்ளார்.

நடிகை பூஜா ஹெக்டே இன்ஸ்டாவில் 27.1 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர். அவர் இந்த லிஸ்டில் 4-வது இடத்தில் உள்ளார்.

திருமணத்திற்கு பிறகு பெரிதாக படங்களில் நடிக்காத நடிகை காஜல் அகர்வால் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்திருக்கிறார். அவர் இன்ஸ்டாவில் 27.1 மில்லியன் பாலோவர்கள் உடன் 3-வது இடத்தில் உள்ளார்.

சினிமாவில் கடந்த ஓராண்டாக நடிக்காமல் இருந்தாலும் இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா இன்ஸ்டாகிராமில் 35.3 மில்லியன் பாலோவர்கள் உடன் 2-வது இடத்தில் உள்ளார்.

நேஷ்னல் க்ரஷ் என செல்லமாக அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா 43.3 மில்லியன் பாலோவர்களுடன் இன்ஸ்டாவில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

NEXT: இணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா  – உமாபதி வெட்டிங் போட்டோஸ்