உறங்குவதற்கு முன்பு இந்த 6 பழங்களை சாப்பிடவே கூடாது

04 July 2024

Pic Credit: unsplash

வாழப்பழத்தில் சர்க்கரை மற்றும் நார் சத்து உள்ளது. உறங்க செல்வதற்கு முன்பு வாழைப்பழம் சாப்பிட்டால், அது செரிமான கோளாறு மற்றும் உறக்கமின்மையை உண்டாக்கும்.

வாழைப்பழம்

ஆப்பிள் பழங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். ஆனால் உறங்க செல்வதற்கு முன்பு ஆப்பிள் பழங்களை சாப்பிட்டால் செரிமான கோளாறு ஏற்படும்.

ஆப்பிள்

சப்போட்டாவில் நார் சத்து மற்றும் அதிக சர்க்கரை இருப்பதால் இரவில் இதை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இது ரத்த சர்க்கரை அளவை உயர செய்வதுடன் தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.

சப்போட்டா

தர்பூசணி பழத்தில் நீர்சத்து நிறைந்துள்ளது. எனவே உறங்க செல்வதற்கு முன்பு தர்பூசணி பழத்தை சாப்பிட்டால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய சூழல் உருவாகும். இதனால் உங்கள் உறக்கம் பாதிக்கப்படும். 

தர்பூசணி

கொய்யாப்பழத்தில் அதிக நார் சத்து இருப்பதால் உறங்க செல்வதற்கு முன்பு அதை சாப்பிட்டால் அசௌகரியத்தை ஏற்படுத்தும். 

கொய்யாப்பழம் 

இரவில் அதிக அளவில் அன்னாசிப்பழத்தை உட்கொண்டால் உடலில் அரிப்பு, வீக்கம் உண்டாக வாய்ப்புள்ளது. இதனால் உங்களால் இரவில் நிம்மதியாக உறங்கமுடியாக சூழல் உருவாகலாம். 

அன்னாசிப்பழம்