இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள் என்னென்ன தெரியுமா?

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவான 'குரங்கு பெடல்' படம் தற்போது ஆஹா ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

அஞ்சலி, விஸ்வாக் சென் நடிப்பில் உருவான ’கேங்ஸ் ஆஃப் கோதாவரி’ படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

நடிகை நிவேதா பெத்துராஜ் நடிப்பில் ஆணவக் கொலைகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ‘பருவு’ என்ற வெப் சீரிஸ் தற்போது ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

கனிஷ்க் வர்மா இயக்கத்தில் மனவ் விஜ் நடிப்பில் உருவாகியுள்ள காந்த் (gaanth) வெப் சீரிஸ் தற்போது ஜியோ சினிமாவில் காணக் கிடைக்கின்றது.

மலையாளத்தில் வெளியான பிராணாயாம் துடாருன்னு படம் தற்போது மனோரமா ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

வித்யா பாலன் நடிப்பில் உருவாகியுள்ள ’டூ அவுர் டூ பியார்’ (do aur do pyaar) படம் தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கின்றது.

அமீர்கானின் மகன் ஜுனைத் கான் அறிமுகமாகும் ‘மகராஜ்’ படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

NEXT: இணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா  – உமாபதி வெட்டிங் போட்டோஸ்