காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத  5 உணவுகள் 

18 JULY 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

காலையில் எழுந்து பலருக்கும் எதாவது சாப்பிட வேண்டும் என தோன்றும்.

காலை பழக்கம்

அப்படி நினைப்பவர்கள் வெறும் வயிற்றில் சில உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. அதனைப் பற்றி காணலாம். 

சாப்பிடக்கூடாது

வெறும் வயிற்றில் பலரும் ஜூஸ் அல்லது இனிப்பான பொருட்களை எடுத்துக் கொள்வர்கள்.  இது அமில உற்பத்தியை அதிகரித்து வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினையை உண்டாக்கலாம்

இனிப்பு பொருட்கள்

டீ மற்றும் காபியில் உள்ள காஃபின் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கிறது. இது இரைப்பையில் பிரச்சினையை உண்டாக்க வாய்ப்புள்ளது.

டீ மற்றும் காபி

வைட்டமின் சி சத்து கொண்ட எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற சிட்ரஸ் வகை பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.  இது வாயுத் தொல்லையை உண்டாக்கும்

சிட்ரஸ் பழங்கள்

வெறும் வயிற்றில் காரமான உணவை சாப்பிடுவதால் வயிற்றில் அதிக அமிலம் உற்பத்தியாகி கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சினையை உண்டாக்கும்.

காரமான உணவு

தக்காளியில் 10க்கும் மேற்பட்ட அமிலங்கள் காணப்படும் நிலையில் இதனையும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. காலை எழுந்தவுடன் முதலில் தண்ணீர் குடித்து விட்டு ஏதாவது சாப்பிடலாம்.

தக்காளி