சிறுநீரகத்தை பாதுகாக்கும் 6 சிறந்த பழங்கள்!

06 SEP 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

பழங்கள்

பழங்கள் சுவையானவை மட்டுமன்றி உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்க கூடியவை. இந்நிலையில் சிறுநீரகத்தை பாதுகாக்கும் 6 பழங்கள் குறித்து பார்ப்போம்.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்தவை. இது சிறுநீரக பிரச்னைகள் உள்ளவர்களுக்கு சிறந்த பலன்களை வழங்கும்.

ஆப்பிள்

ஆப்பிள் பழத்தில் சோடியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் குறைவாக இருப்பதால் சிறுநீரக பிரச்னைகள் உள்ளவர்களுக்கு சிறந்த உணவாக இருக்கும்.

கிரான்பெர்ரி

கிரான்பெர்ரி பழத்தில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. இவை சிறுநீரக பிரச்னை உள்ளவர்களுக்கு சிறந்ததாக இருக்கும்.

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது சிறுநீரக கற்களின் அபாயத்தை குறைக்கிறது.

தர்பூசணி

தர்பூசணி பழத்தில் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் குறைவாக இருப்பதால் சிறுநீரக பிரச்னைகள் உள்ளவர்களுக்கு இது பாதுகாப்பானதாக இருக்கும். 

கருப்பு திராட்சை

கருப்பு திராட்சை பழங்கள் சிறுநீரகங்களுக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், சிறுநீரகத்தை ஆரோக்கியத்தையும் வழங்கும் சிறந்த பழமாகும்.

மேலும் படிக்க