24 October 2024
Pic credit - freepik
Author : Mukesh
மீதமான உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது தவறு. இதில் உள்ள சத்துகள் அழிந்து, வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும்.
பொதுவாகவே காய்கறிகளை 15 முதல் 20 நிமிடங்களுக்கு மேல் சமைக்கக் கூடாது. அதிலுள்ள சத்துகள் குறைந்து, எந்த பலனையும் தராது.
வறுத்த உணவுகளை அடிக்கடி வீட்டில் சமைப்பதை தவிர்க்கவும். இது உங்களுக்கு வயிற்று வலி, அஜீரணம் போன்ற பிரச்சனையை தரும்.
வறுத்த உணவுகளை அதிகம் உட்கொள்வது சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் அபாயத்தையும் அதிகரிக்க செய்யும்.
வெள்ளரி, உருளைக்கிழங்கு, பூசணி போன்ற காய்கறிகளின் தோல்களில் அதிக அளவு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இவற்றை தோலுடன் சமைத்து சாப்பிடுவதே நல்லது.
ஒவ்வொரு காய்கறியையும் தோலுரித்து சமைப்பதும் ஆரோக்கியத்திற்கு தீங்கு தரும். ஒரு சில காய்கறிகளில் தோலில் மட்டுமே அதிக சத்துக்கள் இருக்கும்.
விரைவாக சமைக்க வேண்டும் என்ற காரணத்தினால் காய்கறிகளை ஒழுங்காக வெட்டுவது கிடையாது. இது ஒழுங்காக வேகாமல், செரிமானத்திற்கு தீங்கு தரும்.