31 OCT 2024
Author Name : Vinalin Sweety K
Pic credit - Unsplash
இஞ்சி சாப்பிடுவதால் குடல் இயக்கம் நன்றாக இருக்கும். இதன் காரணமாக செரிமானம் எளிதாகும்.
தயிர் குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் ஆரோக்கியத்தை சமநிலையில் வைக்க உதவும். இதன் மூலம் செரிமானம் மேம்படும்.
ஓட்ஸில் கரையக்கூடிய நார்சத்துகள் உள்ளன. அவை செரிமானத்தை மேம்படுத்துகின்றன.
பப்பாளியில் செரிமானத்தை மேம்படுத்த உதவும் பாப்பைன் அதிகம் உள்ளது. அது செரிமானத்தை எளிதாக்குகிறது.
காலிஃப்ளவரில் நார்சத்து அதிகம் உள்ளதால் அது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
வாழைப்பழத்தில் கரையக்கூடிய நார்சத்து அதிகம் உள்ளது. அது, குடன் இயக்கத்தை சீராக்கி செரிமானத்தை மேம்படுத்துகிறது.
ஆப்பிள் சைடர் வினிகரில் அசிட்டிக் அமிலம் உள்ளதால் அது செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது.