குழந்தைகள்  வளர்ப்பில் பெற்றோர் செய்யக்கூடாத விஷயங்கள்!

30 September 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

பெற்றோர் குழந்தைகள் வளர்ப்பது என்பது மன அழுத்தத்தை உண்டாக்கும். ஆனால் எந்த சூழலிலும் நிதானம் இழக்க வேண்டாம்.

நிதானம்

குழந்தையின் எண்ணங்கள், கேள்விகளை எப்போதும் நிராகரிக்க கூடாது. அதனை உடனடியாக தீர்க்க முற்பட வேண்டும்

நிராகரிப்பு

என்னதான் படிப்பு தவிர பிற கலைகளில் குழந்தைகளை ஈடுபட அறிவுறுத்தினாலும் அதிக நேரம் செலவழிக்க சொல்லக்கூடாது

பிற கலைகள்

நீங்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை நீங்களே மீறும்போது குழந்தைகள் நம்பிக்கை இழப்பார்கள்

வாக்குறுதி

குழந்தைகள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வேளையில் சொந்த உடல்நலனையும் பார்க்க வேண்டும்

உடல் நலன்

எப்போதும் குழந்தைகளை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் அவர்கள் சுதந்திரத்தை பறிக்கக்கூடாது

சுதந்திரம்

எக்காரணம் கொண்டும் உங்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது

ஒப்பீடு