குழந்தைகளை புத்தகப்பிரியர்களாக மாற்ற எளிய வழி!

19 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

குழந்தைகள் ஆர்வத்தை தூண்டும் வகையிலான கதை அல்லது புத்தகத்தை தேர்வு செய்ய வேண்டும். உரக்க படிக்க சொல்லுங்கள்

சரியான கதை

சாப்பிடும்போது அருகில் புத்தகம் அல்லது செய்திதாளை வைக்கும்போது இயற்கையாகவே படிக்கும் ஆர்வம் ஏற்படும்

ஏற்ற நேரம் 

குழந்தைகள் வீட்டில் படிப்பதற்கென்று தனியிடம் இதுக்க வேண்டும். அந்த இடத்தில் எந்தவித சத்தமும் இல்லாமல் இருப்பது அவசியம்

படிக்கும் இடம் 

வாரம் ஒரு குறிப்பிட்ட இலக்கு வைத்து படிக்க சொல்லலாம். அதிலிருக்கும் நல்ல விஷயங்களை கூற சொல்லலாம்

இலக்கு

குழந்தைகளை தாங்களே தேர்வு செய்து புத்தகம் படிக்க வைக்கலாம். இதனால் அவர்களுக்கு தங்கள் தேவை புரியும்

சுய தேர்வு

ஒரு புத்தகம் படிக்க எத்தனை நாள் எடுக்கிறது, அதில் சொல்லப்பட்ட கருத்து என்ன என்பதை குறித்துக் கொண்டால் வாசிப்பு பழக்கம் சீராகும்

குறிப்பு

ஆரோக்கியமான போட்டி இருந்தால் சிறப்பு. அதன்படி குடும்பமாக உட்கார்ந்து படிக்கும்போது ஆசை அதிகமாகும்

கூட்டுப் படிப்பு