உங்களைச் சுற்றி மகிழ்ச்சியான  உறவுகளை உருவாக்குவது எப்படி?

16 October 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

எந்த சூழலாக இருந்தாலும் சரி பாசிட்டிவான மனநிலையுடன் அணுகுங்கள். அதுவே வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கான முதல் படியாகும்

பாசிட்டிவ்

உங்கள் வாழ்க்கையில் முக்கியமான நபர்களுக்கு நன்றியுணர்வுடன் இருங்கள். அதுவே வாழ்க்கையில் பல பிரச்னைகளுக்கு தீர்வை வழங்கும்

நன்றியுணர்வு

மற்றவர்களின் குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டாமல் அவர்களின் நல்ல விஷயங்களையும் கட்டாயம் பாராட்டுங்கள் 

பாராட்டு

நாம் எதிர்பார்ப்பது போலவே மற்றவர்கள் இருக்க மாட்டார்கள். எனவே அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் 

ஏற்றுக்கொள்ளுதல்

எப்போதும் செயல்கள் மற்றும் வார்த்தைகளில் கவனமாகவும் நிதானமாகவும் செயல்பட முயற்சியுங்கள்

கவனம்

மற்றவர்களால் எளிதில் பாதிக்கப்படாத வண்ணம் உங்களுக்கு எது சிறந்ததாக இருக்கும் என்பதை நிதானமாக முடிவு செய்யுங்கள் 

முடிவு

மற்றவர்களிடம் பரிவுடனும், கனிவாகவும் நடந்துக் கொள்ள பழகுங்கள். இது அதிகப்படியான உறவுகளை வளர்க்கும்

பரிவு