30 OCT 2024
Author Name : Vinalin Sweety K
Pic credit - Unsplash
நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் சமீபத்திய மாடலாக இல்லை என்றால் உங்களால் புதிய அப்டேட்டுகள் மற்றும் செயலிகளை பதிவிரக்கம் செய்ய முடியாமல் போகலாம்.
இந்த சூழலில் நீங்கள் புதிய ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் கட்டாயம் ஏற்படலாம்.
உங்களது ஸ்மார்ட்போன் பழையதாகி விட்டால் மிக விரைவாக பேட்டரி தீர்ந்துவிடுவது, சார்ஜ் ஆக பல மணி நேரம் எடுத்துக்கொள்வது உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.
பல ஆண்டுகளாக ஒரே ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறீர்கள் என்றால், ஸ்மார்ட்போன் பழையதானதும் சில சமயங்களில் மொபைல் போனை பயன்படுத்த முடியாமல் ஹேங் ஆவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
நீண்ட நாட்கள் ஒரே ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் பட்சத்தில் அதன் வேகம் குறைய வாய்ப்புள்ளது.
இந்த சூழலில் புதிய ஸ்மார்ட்போன் வாங்கினால் மட்டுமே எந்தவித பிரச்னையும் இன்றி ஸ்மார்ட்போன் பயன்படுத்த முடியும்.
உங்கள் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் கடந்துவிட்டால் அதற்கான புதுப்பிப்புகள் கிடைக்காமல் போகலாம். இதனால் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.