குழந்தைகள் ஏன்  பொய் சொல்ல ஆரம்பிக்கிறார்கள்?

26 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

குழந்தைகள் செய்யும் தப்புக்கு பெற்றோர்கள் மிக கடுமையாக நடந்துக் கொள்ளும்போது இயல்பாகவே அவர்களுக்குள் ஒரு பயம் ஒட்டிக்கொள்கிறது

மிகைப்படுத்துதல்

குழந்தைகள் மீது திணிக்கப்படும் எதிர்பார்ப்பு அவர்களுக்கு உண்மையை சொல்வதில் மிகப்பெரிய தயக்கத்தை உண்டாக்கும்

எதிர்பார்ப்பு

தவறை நேர்மையாக ஒப்புக்கொண்டாலும் தண்டிக்கும்போது பொய்யை தேர்வு செய்யும் வாய்ப்பு அதிகம்

தண்டிப்பு

குழந்தைகள் வளர்ப்பில் விதிகளை வகுத்து அவர்களை ஒரு எல்லைக்குள் அடைக்கும்போது அது எதிர்விளைவுகளை உண்டாக்கலாம்

விதிகள்

பெற்றோர்களைப் பார்த்து தான் குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள். அதனால் எதிர்மறையாக நடப்பது குழந்தைகளைப் பாதிக்கிறது

பழக்கம்

எல்லா விஷயத்திலும் நம்பிக்கை இல்லாமை, சந்தேகம் குணத்துடன் பெற்றோர்கள் இருந்தால் குழந்தைகள் பொய் சொல்வார்கள்

நம்பிக்கையின்மை

வெளிப்படையான தொடர்பு இல்லாமல் இருக்கும் குழந்தைகள் அதனை செயல்படுத்த பொய்யை நாடலாம்

தொடர்பு