மசாலா பொருட்களில் செய்யப்படும் கலப்படத்தை ஈசியா கண்டுபிடிக்கலாம்.

15  May 2024

Photos : pexels

ஒரு ஸ்பூன் மிளகாய்ப்பொடியை தண்ணீரில் போடவும், 5 நிமிடத்திற்குப் பிறகு மிளகாய்ப்பொடி அடியில் சென்று படிந்ததும் தண்ணீர் சுத்தமாக இருந்தால் மிளகாய்ப்பொடியும் சுத்தமானது.

 மிளகாய்ப்பொடி

ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் மஞ்சள்தூளை போட்டு,10 நிமிடங்களில் அடியில் சென்று படிந்து தண்ணீர் சுத்தமானதாக இருந்தால், அது கலப்படமற்ற மஞ்சள்தூள்

மஞ்சள்தூள்

ஒரு ஸ்பூன் சீரகத்தூளை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுப்பாருங்கள் எதுவும் மிதக்காமல் அடியில் சென்று தங்கிவிட்டால் அது சுத்தமான சீரகத்தூள். 

சீரகத்தூள்

ஒரு ஸ்பூன் மிளகை சுத்தமான ஆல்கஹால், ஜின் அல்லது வோட்காவில் போட்டுப் பாருங்கள், பப்பாளி விதைகள் கலக்கப்பட்டிருந்தால் அது அடியில் சென்று படிந்துவிடும், சுத்தமான மிளகு மேலாக மிதக்கும்.

 மிளகு

செழிப்பான பச்சை நிறமாகவும், அழுத்திப் பார்த்தால் உள்ளே நல்ல விதையுடனும் இருப்பது சிறந்த ஏலக்காய். வெளிர் பச்சை நிறமாகவும், விதைகளற்று சப்பிப்போய் இருந்தாலும் அது கலப்படமான ஏலக்காய்

 ஏலக்காய்

ஒரு சிட்டிகை பெருங்காயத்தூளை சிறிது நீரில் போட்டால் கசடு அடியில் தங்கி சுத்தமான பெருங்காயத்தூள் நீரில் கரைந்துவிடும்.

பெருங்காயத்தூள்

Next:  கோடை காலத்தில் உடலை கூலாக வைக்கும் உணவுகள்!