17JULY 2024
Pic credit - Instagram
Petchi Avudaiappan
இந்திய உணவுகளில் கோதுமை சார்ந்த உணவான சப்பாத்தி மற்றும் ரொட்டிக்கு தனி இடம் உள்ளது
சமைக்கும்போது கொஞ்சம் விட்டாலும் சப்பாத்தி மாவு தொடங்கி சமைத்தது வரை எல்லாம் கெட்டியாக மாறி மெல்ல முடியாமல் போய்விடும்
சப்பாத்தி மாவில் பச்ச தண்ணீரை சேர்க்காமல் வெதுவெதுப்பான நீரை போதுமான அளவு சேர்க்க வேண்டும். அதற்கு முன்னால் மாவை நன்றாக சலிக்க வேண்டும்
சிறிது சிறிதாக தேவையான தண்ணீர் சேர்த்து பிசைந்த பிறகு 5 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும். இதுதான் சப்பாத்தி மிருதுவாவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சப்பாத்தி மாவை சிறிது சூடான எண்ணெய் ஊற்றி பிசைந்தால் இன்னும் மிருதுவாக இருக்கும். அதிகமாக உபயோகிக்கக்கூடாது
அவசரத்தில் செய்யும் சப்பாத்தி மிருதுவாக அமைய தண்ணீர் இல்லாத ஈரமான துணியை கொண்டு மாவை 10 நிமிடங்கள் மூடினால் மிருதுவாக மாறிவிடும்
சப்பாத்தி மிருதுவாக வருவதற்கு முட்டையின் வெள்ளைக்கரு அல்லது தயிரை மாவு பிசையும்போது சேர்த்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்