பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

டிஆர்பி-யில் முதலிடம் பிடித்த சன் டிவி... டாப் 10 லிஸ்ட் இதோ!

14 September 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

கார்த்திகை தீபம்

கடந்த வாரம் ராமாயணம் சீரியல் 10-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் ஜீ தமிழ் கார்த்திகை தீபம் 6.06 புள்ளிகளுடன் அந்த இடத்தைப் பிடித்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 

9-வது இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.62 புள்ளிகளுடன் இடம் பிடித்துள்ளது.

சுந்தரி

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் 7.00 புள்ளிகளுடன் 8ம் இடத்தை பிடித்துள்ளது.

மல்லி

கடந்த வாரம் 6-ம் இடம்பிடித்த மல்லி சீரியல் இந்த வாரம் பின்னுக்கு தள்ளப்பட்டு 7.02 புள்ளிகளுடன் 7-ம் இடம்பிடித்து உள்ளது.

பாக்கியலட்சுமி

கடந்த வாரம் 7வது இடத்தில் இருந்த பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் முன்னேறி 7.70 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

மருமகள்

கடந்த வாரம் மூன்றாம் இடத்தில் இருந்த மருமகள் சீரியல் இந்த வாரம் 8.20 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.

மூன்று முடிச்சு

கடந்த வாரம் ஐந்தாம் இடத்தில் இருந்த மூன்று முடிச்சு சீரியல் 8.27 புள்ளிகளுடன் 4-ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த வாரம் 4-வது இடத்தில் இருந்த நிலையில் 8.61 புள்ளிகளைப் பெற்று 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

சிங்கப்பெண்ணே

சிங்கப் பெண்ணே சீரியல் கடந்த வாரம் இரண்டாவது இடத்தைப் பிடித்த நிலையில் இந்த வாரமும் 8.64 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.

கயல்

கடந்த வாரம் கயல் சீரியல் முதலிடத்தை பிடித்த நிலையில்,  இந்த வாரமும் 8.98 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது கயல் சீரியல்.