27 October 2024
Pic credit - PTI
Vinothini Aandisamy
என் முன் நிற்கும் பாம்பு தான் அரசியல். பாம்பை பிடித்து விளையாட ஆரம்பித்துள்ளேன் என்று விஜய் கூறியுள்ளார்.
சோசியல் மீடியாவில் கம்பு சுத்தவந்த கூட்டம் இல்ல, இந்த சமூகத்திற்காக வால் ஏந்தி நிக்கப்போற கூட்டம். நம்ம மண்ணை வாழ வைப்பதற்காக அரசியல் வால் ஏந்தி நிக்கப்போற கூட்டம்.
ஒன்றே குலம், ஒருவரே தேவன் என்பதே எங்களின் நிலைப்பாடு என்றும் கடவுள் மறுப்பு கொள்கையில் உடன்பாடு இல்லை என்றார் விஜய்
பெரியார் என்றதும் ஒரு கூட்டம் பெயிண்ட் டப்பாவை தூக்கி கொண்டு வருகிறார்கள் என்று விஜய் தெரிவித்துள்ளார்
சொல் அல்ல செயல் தான் முக்கியம் என்றும் வெறுப்பு அரசியலை எப்போதும் கையில் எடுக்க மாட்டோம் என்று விஜய் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கப்போது பெண்கள். என்னுடைய அம்மாக்கள், என்னுடைய அக்கா, தங்கைகள், என் நண்பிகள்.
பிளவுவாத சித்தாந்தம், ஊழல் மலிந்த கலாச்சாரம் ஆகியவை தான் எங்களின் எதிரிகள் என்றார் த.வெ.க தலைவர் விஜய்.
திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளை அடிக்கிற ஒரு குடும்ப சுயநல கூட்டம்தான் நம்மளுடைய எதிரி.
கொள்கை மற்றும் கோட்பாடு அடிப்படையில் நாம் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் பிரித்து பார்க்கப்போவது இல்லை.
2026 சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்று விஜய் தெரிவித்துள்ளார்.