15 OCT 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
இட்லி, தோசை என்பது நமது வீடுகளில் முக்கிய உணவாக இருக்கிறது. இதற்காக வாரத்தில் 2 முறையாவது மாவு அரைக்கிறோம்
அப்படி அரைக்கு மாவு உடனடியாக புளித்து விடுவதால் அதை பயன்படுத்த முடியாமல் போகிறது.
எனவே, நீங்கள் அரைக்கும் தோசை மாவு ப்ரெஷாக இருக்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பார்ப்போம்
தோசை மாவு அரைத்தவுடன் உடனடியாக ஒரு டப்பாவில் போட்டு அடைத்து வைக்கவும்
6 மணி நேரம் மாவை வெளியே வைத்துவிட்டு பிரிட்ஜில் வைக்கலாம். நீண்ட நேரம் வெளியே வைத்தால் சீக்கிரம் புளித்துவிடும்
அதிகமாக உப்பு சேர்த்தாலும் உடனடியாக புளித்துவிடும். எனவே உப்பு சேர்க்கும்போது கவனமாக இருக்கவும்
ஒருவேளை அதிகமாக புளித்துவிட்டால் சிறிது தேங்காய் பால் சேர்த்தால் புளிப்பு சுவை இருக்காது