26 May 2024
குளிர்காலத்தை விட வெயில் காலத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடுவது தயிர். இந்த சீசனில் தயிர் சாப்பிடுவது உடலை குளிர்ச்சியாக வைக்கிறது
கோடையில் எல்லாருடைய வீட்டிலும் தயிர் இருக்கும். ஆனால், வெப்பநிலை காரணமாக தயிர் உடனேயே புளித்துவிடுகிறது. இவற்றை என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்
தயிரை சூடான இடத்தில் வைத்தால் உடனே புளித்துவிடும். எனவே, சற்று குளிர்ச்சியான இடத்தில் வைக்கலாம் அல்லது ஃப்ரிட்ஜில் வைக்கலாம்
முடிந்தவரை தயிரை மண் பாத்திரத்தில் வைப்பது நல்லது. அதிலிருந்து தண்ணீர் வராமல் குளிர்ச்சியாக வைக்கும்
தயிரை உறைய வைக்க சிறந்த நேரம் இரவு தான். இரவில் தயிரை உறைய வைத்து காலையில் ப்ரிட்ஜில் வைத்தால் சீக்கிரமாக புளிக்காமல் இருக்கு
இந்த முறைகளை பயன்படுத்தி தயிரை பயன்படுத்தினால் இரண்டு நாட்களுக்கு மேல் தயிர் புளிக்காமல் இருக்கும்.
தயிரில் உள்ள அண்டி ஆக்ஸிடெண்ட் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து பளபளப்பான சருமத்தை தருகிறது. உடல் குளிர்ச்சிக்கும் நல்லது