பாலுடன் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!

22 AUGUST 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

சத்து 

பாலில் பொதுவாக அதிகப்படியான கால்சியம் சத்து உள்ளது. இது வளரும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்

உணவுகள் 

அதேபோல் நாம் பாலுடன் ஒரு சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவோம். பாலுடன் ஒரு சில உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்

சிட்ரஸ் பழம்

பாலுடன் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை சேர்க்கக்கூடாது. அப்படி சேர்த்தால் செரிமான கோளாறு ஏற்படும்

மீன் 

பாலுடன் மீன் சேர்த்து சாப்பிடும் போது ஒரு சில நபர்களுக்கு அது ஒவ்வாமை ஏற்படுத்தும். மேலும் மீனில் இருக்கும் புரதம் பாலை சுருட்டச்செய்யும்

தக்காளி 

தக்காளி அமிலத்தன்மை கொண்டது. எனவே இது பாலுடன் சேர்த்து சாப்பிடும் போது சுவை முற்றிலும் மாறுபட்டு ஒவ்வாமை ஏற்படுத்தும்

ஊறுகாய் 

ஊறுகாய் அல்லது புளிப்புத்தன்மை அதிகம் கொண்ட உணவுகளை சேர்க்கும் போது அசிடிட்டி ஏற்படக்கூடும்

நரம்பு 

மேல் குறிப்பிட்ட உணவுகளை தவிர வாழைப்பழம், ஓட்ஸ், பான்கேக் போன்ற உணவுகளை நாம் சேர்த்து சாப்பிடலாம்