ஆரோக்கியமான எலும்புகளுக்கு கால்சியம் நிறைந்த உணவு..

13 AUGUST 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

கொய்யாப்பழம் 

கொய்யாப்பழத்தில் அதிகப்படியான கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இது எலும்பு வலிமையாக வைத்துக்கொள்ள உதவும்

ஆப்ரிகாட் 

உலர்ந்த ஆப்ரிகாடில் அல்லது ஆப்ரிகாட் பழத்தில் இயற்கையாகவே கால்சியம் சத்து அதிகமாக உள்ளது.

அத்திப்பழம் 

கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த அத்திப்பழம் எலும்பு மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால், இது உடலில் கால்சியம் சத்தை உறிஞ்சுதலை அதிகரிக்க உதவும்

மல்பெர்ரி 

மல்பெர்ரியில் கால்சியம் நிறைந்துள்ளதால் எலும்பு ஆரோக்கியமாக இருக்க உதவும் அதே சமயம் உடலில் இருக்கும் வீக்கத்தை கட்டுப்படுத்தும்

ப்ளாக்பெர்ரி 

ப்ளாக்பெர்ரியில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும்  

கிவி 

கிவி பழத்தில் கால்சியம், வைட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்ஸிடென்ஸ் நிறைந்துள்ளது. இது எலும்புகள் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும்