09 August 2024
09 August 2024
09 August 2024
Pic credit - Pixabay
Aarthi
மனிதர்களுக்கு தண்ணீர் மிக மிக அவசியமான ஒன்று. தண்ணீர் இல்லாமல் நம்மால் ஒரு நாள் கூட வாழ முடியாது.
ஆனால் ஒரு சில விலங்குகள் பல நாட்கள் தண்ணீர் இல்லாமல் உயிர்வாழும் தன்மை கொண்டது.
கோலா கரடிகள் தண்ணீர் குடிக்காமல் பல நாட்கள் தாக்கு பிடிக்கும். அவற்றிற்கு தேவையான நீர்ச்சத்து அவை சாப்பிடும் உணவில் இருந்து கிடைக்கும்
ஃபென்னக் நரி சஹாரா பாலைவனத்தை சேர்ந்தது. இது அவற்றிற்கு தேவையான நீர்ச்சத்தை அது சாப்பிடும் உணவில் இருந்து எடுத்துக்கொள்கிறது
கங்காரூ எலி அதன் வாழ்நாள் முழுவதும் கூட தண்ணீரின்றி உயிர் வாழ முடியும். பிற விலங்குகளை போலவே அதற்கான நீர்ச்சத்து அதன் உணவில் இருந்து கிடைக்கும்
ஒட்டகம் சுமார் 15 நாட்கள் வரை தண்ணீரின்றி வாழ முடியும், அதன் முதுகில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு இந்த தேவையை பூர்த்தி செய்யும்
thorny devills எனப்படும் ஒரு வகையான பல்லி ஆஸ்திரேலியாவை சேர்ந்தது. இது நீர்ச்சத்தை நேரடியாக எடுத்துக்கொள்ளாமல் உணவில் இருந்து எடுத்துக்கொள்ளும்