19 NOV 2024
Author Name : Aarthi
Pic credit - Pixabay
கடைகளில் கிடைக்கும் பிற பானங்கள் போல் அல்லாமல், தேங்காய் தண்ணீரில் இயற்கையான சர்க்கரை உள்ளது. மேலும் கலோரிகள் குறைவாக உள்ளது
இதில் இருக்கும் இரும்பு, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி முடி உதிர்வதை தடுத்து முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
இதில் இயற்கையான சர்க்கரை இருந்தாலும், நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் ரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்தும்
ஆண்டி ஆக்ஸிடென்ஸ் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் சரும ஆரோக்கியம் மேம்படும் அதோடு முகம் பளபளப்பாக இருக்க உதவும்
இதில் இருக்கும் பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்
தேங்காய் நீர், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுப்பதோடு, நச்சுக்களை வெளியேற்ற உதவும்
குறைந்த கலோரிகள் மற்றும் சத்துக்கள் இருப்பதால் நீண்ட காலம் முழுமையாக இருக்க உதவுவதோடு, உடல் எடை கட்டுக்குள் வைக்க உதவும்