9 NOV  2024

வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்..

Author Name : Aarthi

Pic credit - Pixabay

செரிமானம்

காலை வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் செரிமான ஆரோக்கியம் மேம்படும், அதோடு பல நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கும்

ரத்த ஓட்டம்

வெந்நீர் குடிப்பது ரத்த நாளங்களை விரிவுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்

தசை பிடிப்பு

வெந்நீர் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி தசையை தளர்வாக வைத்துக்கொள்வதன் மூலம் தசை பிடிப்பிற்கு நல்ல நிவாரணியாக இருக்கும்

மலச்சிக்கல்

வெந்நீர் உணவை உடைத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கும்

மன அழுத்தம்

வெதுவெதுப்பான நீர் குடிப்பதன் மூலம் மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க உதவும்

சைனஸ்

வெதுவெதுப்பான நீரில் இருந்து வரும் நீராவி மூக்கடைப்பு அல்லது நெரிசலை குறைக்க உதவும்,  சைனஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது சிறந்த தீர்வாகும்

நச்சு

வெந்நீர் தொடர்ச்சியாக குடித்து வந்தால் உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவும் என கூறப்படுகிறது.