11  NOV  2024

மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

Author Name : Aarthi

Pic credit - Pixabay

நன்மைகள்

நல்ல ஆரோக்கியத்தை பெற உதவும் பல ஊட்டசத்துக்கள் நிறைந்த மாதுளை பழத்தை தினசரி சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் கிடைக்கும்

எடை மேலாண்மை

குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து இருக்கும் மாதுளை, நீண்ட நேரம் பசி உணர்வை தூண்டாது. மேலும் எடை மேலாண்மைக்கு உதவும்

அழற்சி எதிர்ப்பு

ஆண்டி ஆக்ஸிடென்ஸ் நிறைந்த மாதுளை அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இது நீண்ட நோயை குணப்படுத்த உதவும்

கொலாஜன்

இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடென்ஸ் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும்

ஆற்றல்

இதில் இருக்கும் சத்துக்கள் உடலின் ஆற்றலை மேம்படுத்த உதவும்

இதய ஆரோக்கியம்

மாதுளையில் இருக்கும் ப்யூனிசிக் அமிலம், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதுடன் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

வைட்டமின் டி

வைட்டமின் சி மற்றும் பிற சத்துக்கள் நிறைந்த மாதுளை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்