புரோட்டீன் பவுடர் எடுத்துக் கொள்ளலாமா?

6 SEPTEMBER 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

உடல் இயக்கம்

நம் உடல் இயக்கத்திற்கும் தசைகள் வலுவாக இருப்பதற்கும் புரோட்டீன் ஒரு முக்கியமான சத்தாகும்.

உடல் எடை 

உடலில் ஹார்மோன்கள் சீராக இருக்கவும், உடல் எடை கட்டுக்குள் இருக்கவும், பசியை கட்டுப்படுத்தவும் புரத சத்து அவசியமாகும்

உடற்பயிற்சி 

விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அதிகப்படியான புரோட்டீன் தேவைப்படும். அதற்காக புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்வார்கள்

உடல் உழைப்பு

கடினமான உடல் உழைப்பு செய்பவர்களுக்கு இந்த புரோட்டீன் பவுடர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு இது எந்த பயனும் தராது

ரத்த சர்க்கரை 

புரோட்டீன் பவுடரிம் சுவையை அதிகரிக்க சர்க்கரை, கொழுப்பு மிகுந்த பால் போன்ற பொருட்கள் சேர்பதால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கக்கூடும்.

புரோட்டீன் பவுடர்

வே புரோட்டீன், கேசீன் புரோட்டீன், சோயா புரோட்டீன், பிரவுன் ரைஸ் புரோட்டீன் என பல வகைகள் உள்ளது.

மருத்துவ ஆலோசனை

எப்படியாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப்படி எந்த அளவு புரோட்டீன் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து பயன்படுத்த வேண்டும்