24 AUGUST 2024
Pic credit - pixabay
Author Name : Aarthi
இதன் வடிவம் நட்சத்திரம் போல் இருப்பதால் இதற்கு ஸ்டார் பழம் என பெயர் வந்தது. இது குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்கும்
இனிப்பு மற்றும் புளிப்பு சுவை மிகுந்த இந்த பழம் சாப்பிடுவதால் இன்சுலின் மேலான்மைக்கு வழிவகுக்கும்.
இதில் குறைந்த கலோரிகள் இருப்பதால், உடலில் அதிக கொழுப்பு தேங்க விடாமல் உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்
இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்
வைட்டமின் சி, பி போன்ற சத்துக்கள் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
இந்த பழம் சாப்பிடுவதால் இதயத்திற்கான ரத்த ஓட்டம் சீராகி இதய நோய் வராமல் தடுக்கும்
இந்த பழத்தை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும்