வைட்டமின் டி அதிகரிக்க எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..

7 OCTOBER2 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

வைட்டமின் டி

நம் உடலுக்கு தேவையான மிக முக்கியமான சத்துக்களில் ஒன்று வைட்டமின் டி. சத்துக்கள் உறிஞ்சுதல், மன நலம் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு இது தேவை.

சூரியன்

வைட்டமின் டி இன் முதன்மையான ஆதாரம் சூரியன் தான். இதனை தவிர உணவு மூலம் வைட்டமின் டி பெறலாம்

காளான்

வைட்டமின் டி-க்கான சிறந்த உணவுகளில் ஒன்று தான் காளான். இதில் அதிகப்படியான வைட்டமின் டி உள்ளது

மீன்

சால்மன், கானாங்கெளுத்தி, சூரை மீன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் வைட்டமின் டி உடன் ஒமேகா 3 அமிலமும் உள்ளது.

ஆரஞ்சு

சிட்ரஸ் நிறைந்த ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் டி உள்ளது. மழைக்காலத்தில் வைட்டமின் டி பற்றாக்குறை போக்க இதனை எடுத்துக்கொள்ளலாம்

சீஸ்

பால், தயிர், சீஸ் உள்ளிட்ட பொருட்களில் வைட்டமின் டி செறிவூட்டப்பட்டுள்ளது. இந்த பொருட்களை வாங்கும் போது இதனை கவனித்து வாங்கலாம்

முட்டை

முட்டையில் குறிப்பாக மஞ்சள் கருவில் வைட்டமின் டி அதிகமாக உள்ளது. இதனுடன் புரதம் மற்றும் பிற சத்துகள் நிறைந்துள்ளது.