சுதந்திர தினத்தில் சமைக்க வேண்டிய உணவுகள்

15 AUGUST 2024

Author Name : Aarthi 

மூவர்ண இட்லி 

நம் தேசிய கொடியில் இருக்கும் மூன்று வண்ணங்களை போலவே, மூன்று வண்ணங்களில் இட்லியை சமைத்து சாப்பிடலாம். கேரட் இட்லி, புதினா இட்லி மற்றும் வெறும் இட்லியை செய்து சாப்பிடலாம்

மூவர்ண சாதம் 

தேசிய கொடியில் இருக்கும் காவி நிறத்திற்கு குங்கும பூ சாறு கலந்த பட்டாணி புலாவ் செய்யலாம், வெள்ளை நிறத்திற்கு தேங்காய் பால் சாதம் மற்றும் பச்சை நிறத்திற்கு புதினா சாதம் செய்யலாம்.

மூவர்ண சப்பாத்தி 

மூன்று வண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக, பாலக் கீரை போட்ட பாலக் சப்பாத்தி, சாதரண சப்பாத்தி மற்றும் கேரட் சாறு அல்லது ஜூஸ் கலந்த கேரட் சப்பாத்தி.

மூவர்ண ஹல்வா

 வெள்ளை நிறத்திற்கு வெள்ளை பூசணி போட்ட ஹல்வா, பச்சை நிறத்திற்கு நம் சுவைக்கு ஏற்ப வெற்றிலை அல்லது ஃபுட் கலர் சேர்த்து ஹல்வா செய்யலாம், ஆரஞ்சு நிறத்திற்கு கேரட் ஹல்வா செய்து கொடுக்கலாம்.

மூவர்ண தோசை 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவு தோசை. மூவர்ணத்தில் தோசை சுட்டு அசத்தலாம்

மூவர்ண லட்டு 

லட்டு என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். சுதந்திர தினத்தில் தேசிய கொடியில் இருக்கும் மூன்று வண்ணங்களை போலவே மூவர்ணத்தில் லட்டு செய்து கொடுக்கலாம்

மூவர்ண தோக்லா

குஜராத் மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தோக்லா மூன்று வண்ணங்களில் செய்து கொடுக்கலாம்