30 JULY 2024
Aarthi
Pic credit - pixabay
கடுக்காய் பொடியை தினசரி அக்குள் பகுதியில் தடவி ஒரு 10 அல்லது 15 நிமிடத்திற்கு பின் கழுவ வேண்டும். இதனை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்
இருக்கமான உடைகள் அணியாமல் நல்ல தளர்வான உடைகளை அணிய வேண்டும். பருத்தி ஆடைகள் அணிவது சிறந்தது.
பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள், பயறு வகைகள், கிழங்கு வகைகளைத் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்
வேப்பிலையுடன் மஞ்சள் தூள் கலந்து தடவினால் நல்ல தீர்வு கிடைக்கும். வேப்பிலையில் கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது
வாசனை மிக்க சோப்பை தவிர்த்து, பச்சை பயிறு அல்லது கடலை மாவு தேய்த்து குளித்து வந்தால் துர்நாற்றம் நீங்கும்
தயிருடன் மஞ்சள் தூளை கலந்து பயன்படுத்தினால் வியற்வை சுரபியில் இருக்கும் கெட்ட கிருமிகளை அழிக்க உதவும்
எண்ணெய் நிறைந்த தின்பண்டங்கள், துரித உணவுகளை தவிர்த்து தினசரி இரண்டு முறை குளித்து வந்தால் இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும்