15 SEP 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
அனைவரின் வீடுகளில் வெள்ளை சாதம் என்பது தினமும் பயன்படுத்தக் கூடிய ஒன்று. குறிப்பாக மதிய வேளை சாப்பாடிற்கு சாதம் சாப்பிடுவார்கள்
ஆனால் பலரும் மூன்று வேளையும் வெள்ளை சாதம் சாப்பிடுகின்றனர். இப்படி சாப்பிடுவதால் பல பிரச்னை ஏற்படலாம் என்கின்றனர் நிபுணர்கள்
வெள்ளை அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. எனவே 3 வேளை சாப்பிடுவதை தவிர்க்கவும்
3 வேளையும் சாதம் சாப்பிட்டால் உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து நீரிழிவு நோய் வரலாம்
ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாதம் 3 வேளை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும்
சாதத்தில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால் உடல் எடை அதிகரிப்பதோடு, கொழுப்பு சதவீதம் இரட்டிப்பாகும்
சாதம் 3 வேளை சாப்பிடும்போது கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கலாம். இதனால் இதயம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம்