11  NOV  2024

மன அழுத்தத்தை குறைக்க உதவும் உணவுகள்..

Author Name : Aarthi

Pic credit - Pixabay

புரதம்

புரதம் நிறைந்த உணவுகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும். இது மன அழுத்தத்தை மோசமாகும் நிலையை தடுக்கும்

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரியில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற பன்புகள் மூளையின் செல்களை பாதுகாக்கும். இது மனநிலையை சீராக வைக்க உதவும்

டார்க் சாக்லேட்

மெக்னீசியம் நிறைந்த டார்க் சாக்லேட் ஹார்மோன்களை கட்டுப்படுத்துவதுடன் மூளையின் பதற்றத்தை குறைப்பதாக கூறப்படுகிறது.

பூசணி விதை

துத்தநாகம் நிறைந்த பூசணி விதைகள் மன நிலையை சமநிலையாக்கும் கனிம ஊட்டச்சத்துக்களை கொண்டது என கூறப்படுகிறது.

புரோபயாட்டிக்

புரோபயாட்டிகள் நிறைந்த உணவுகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குடல் ஆரோக்கியம் மூளை ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு உள்ளது

அவகேடோ

பி வைட்டமின்கள் நிறைந்த அவகேடோ மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க உதவும்

கிவி

கிவியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இது உடலில் கார்டிசால் அளவை கட்டுக்குள் வைத்து மன அழுத்தம் வராமல் தடுக்கும்