2 NOV 2024
Author Name : Aarthi
Pic credit - Pixabay
நம் உடலுக்கு தேவையான சத்துக்களில் ஒன்று புரதம், இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியமாக இருக்க உதவும்
மாதுளையில் வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள் இருப்பதுடன் 100 கிராம் மாதுளை விதையில் 1.7 கிராம் அளவு புரதம் உள்ளது.
செர்ரி பழத்தில் புரதம் மட்டுமல்லாமல் அத்தியாவசிய சத்துக்கள் உள்ளது. ஒரு கப் செர்ரியில் 1.6 கிராம் புரதம் உள்ளது
குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்கும் பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், மெக்னீசியத்துடன் புரதமும் நிறைந்துள்ளது
மலிவு விலையில் கிடைக்கும் கொய்யாப்பழத்தில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. ஒரு கப் கொய்யாவில் 4 கிராம் புரதம் அடங்கியுள்ளது
வைட்டமின், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்த ஒரு கப் கிவி பழத்தில் 2 கிராம் அளவு புரதம் உள்ளது
பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழத்தில் புரதம் அதிகமாக உள்ளது. எனவே தினசரி உணவில் புரதம் நிறைந்த பழங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்