10 August 2024
Aarthi
புகழ்பெற்ற இந்திய வானியலாளரான ஆர்யபட்டாவின் பெயரால் அழைக்கப்பட்ட செயற்கைக்கோள் முதல் இந்திய செயற்கைக்கோள் ஆகும்.
இன்சாட் தொடர் இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் ஒரு புரட்சியைக் கொண்டு வந்தது. வானிலை முன்னறிவிப்பு, பேரழிவு எச்சரிக்கை மற்றும் தேடல் ஆகியவற்றிற்கு உதவுகிறது
GSAT முக்கியமாக டிஜிட்டல் ஆடியோ, டேட்டா மற்றும் வீடியோ பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
சந்திரயான்-1 மூலம் தான் நிலவில் உள்ள தண்ணீர் பற்றி உலகம் அறிந்தது.
செவ்வாய் கிரகத்தை முதல் முயற்சியிலேயே அடைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
சூரியனின் மேற்புற வளிமண்டல அடுக்கை ஆய்வு செய்யவும், சூரியனிலிருந்து வெளிவரும் அயனியாக்கப்பட்ட துகள்களின் தன்மை குறித்து ஆராயவும் ஆதித்யா எல் 1 விண்ணில் செலுத்தப்பட்டது.