ஏலக்காயில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்..

7 OCTOBER2 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

மருத்துவ குணங்கள்

நம் அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் வாசனை பொருளான ஏலக்காயில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது.

சத்துக்கள்

ஏலக்காயின் விதையில் புரதச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் பிற சத்துக்கள் உள்ளது

கபம்

ஏலக்காய் பொடியுடன் சுக்கு பொடி மற்றும் துளசி சாறு கலந்து சாப்பிட்டால் நீண்ட நாள் கபம் குணமாகும்

புத்துணர்ச்சி

ஏலக்காய் கல்லீரலில் இருக்கும் தேவையற்ற யூரியா, கால்சியம் மற்றும் பிற நச்சுக்கள் நீக்க உதவும், உடலை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ளும்

நரம்பு தளர்ச்சி

ஏலக்காய் டீ அல்லது ஏலக்காய் தினசரி எடுத்து வர நரம்பு தளர்ச்சி அல்லது நரம்பு தொடர்பான பிரச்சனைகள் வராது

தலைவலி

ஏலக்காய், மிளகு, சுக்கு ஆகியவற்றுடன் பால் சேர்த்து விழுதாக அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி குணமாகும்

பித்த மயக்கம்

ஏலக்காய் பொடி, சீரக பொடி, மல்லி பொடியுடன் கருப்பட்டி சேர்த்து தினசரி நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வர பித்த மயக்கம் சரியாகும்.