கொலஸ்ட்ரால் குறைக்க என்ன வழிகள்?

03 August 2024

Pic credit - Pixabay 

Author : Aarthi 

           நார்ச்சத்து 

காலையில் நல்ல நார்ச்சத்து, புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும்

           ஆரஞ்சு 

ஆரஞ்சு பழச்சாறை தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டு வந்தால் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும். இதில் அதிகப்படியான ஃப்ளாவோனாய்டு இருக்கிறது

           நடைப்பயிற்சி 

தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம். குறிப்பாக காலை நேரத்தில் ஒரு 30 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொண்டால் சிறப்பு

           ஆளி விதை

ஆளி விதை எனப்படும் flax seeds -ல் ஒமேகா 3 அதிகமாக இருப்பதால் கெட்ட கொழுப்பை குறைக்க இது உதவும்

           க்ரீன் டீ 

காபி டீயை குறைத்து க்ரீன் டீ எடுத்துக்கொள்ளலாம். இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸ்டென்ஸ் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கும் 

            பாதாம் 

தினசரி 3 அல்லது 4 பாதாம் எடுத்துக்கொண்டால் உடலில் கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும்

    ஆலிவ் ஆயில் 

சமையலுக்கு சாதாரண எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்த்து ஆலிவ் ஆயிலை பயன்படுத்தலாம்