24 OCT 2024
Author Name : Aarthi
Pic credit - Pixabay
மழைக்காலத்தில் வரும் சாதரண காய்ச்சல் ஓரிரு நாட்களில் சரியாகிவிடும். ஆனால் டெங்கு போன்ற காய்ச்சல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
கொசுக்கள் மூலம் டெங்கு, மலேரியா, ஜிகா, சிக்கன்குனியா போன்ற நோய்கள் பரவும், குறிப்பாக ஏடிஎஸ் கொசுக்களால் இந்த நோய் பரவுகிறது
மாதுளை பழத்தில் ரத்த அணுக்களை குறையாமல் இருக்கவும் ரத்தத்தை உருவாகுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது
பொதுவாக டெங்கு வந்தால் உடலில் நீர்ச்சத்து குறையும், எனவே எலக்ட்ரோலைட்டுகள் அதிகமாக இருக்கும் தேங்காய் தண்ணீர் குடிக்கலாம்
ஆரஞ்சு பழத்தில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடென்ஸ் மற்றும் வைட்டமின் சி டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க பப்பாளி இலை சாறை எடுத்துக்கொள்ளலாம். இதில் பப்பையின் நொதிகள் உள்ளது.
டெங்கு காய்ச்சலால் ரத்த தட்டுகள் குறைந்தால், புரொக்கோலி எடுத்துக்கொள்ளலாம். இதில் இருக்கும் வைட்டமின் கே ரத்த தட்டுகளை உருவாக்க உதவும்