20 NOV 2024
Author Name : Aarthi
Pic credit - Pixabay
அடிக்கடி அல்லது தினசரி மது அருந்துவது உடலுக்கு பல வகையில் தீங்கு விளைவிக்கும். இது புற்றுநோய் அபாயத்தை கூட அதிகரிக்கும்
இதன் அறிகுறிகள் கண்டறிவது மிகவும் அவசியம், மது பழக்கம் புற்றுநோய்க்கு தொடர்பு இருப்பதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
மது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அஸிடால்சிஹைடாக மாற்றுகிறது. இது டி.என்.ஏ மற்றும் உடலில் இருக்கும் புரதங்களுக்கு மிகவும் மோசமான ஒன்று
மது அருந்தும் போது உடன் புகைப்பிடிப்பது வாய் அல்லது தொண்டை புற்றுநோய் அபாயங்களை அதிகரிக்கும்
நீண்ட நேரம் மது அருந்துபவர்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படக்கூடும் என ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது
நீண்ட காலமாக மது அருந்துபவர்களுக்கு கல்லீரலில் சிரோஸிஸ் ஏற்பட்டு கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது
மது அருந்துவது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் கேடு தான். இது மார்பக புற்றுநோய் வர வழிவக்கும் என கூறப்படுகிறது